நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

Neelamalai_payanam_pic

இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில், நால்வர் நீலகிரிக்கு ஒரு முக்கியமான காரணத்துக்காகப் பயணம் மேற்கொள்கின்றனர்.  இக்குழுவில் ஆதிரை என்ற எட்டாம் வகுப்பு மாணவியும் அடக்கம்.  மலையைச் சுற்றியுள்ள காடுகளுக்கு, இவர்கள் பயணம் செய்த போது, ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களே கதை. 

இவர்களைக் காரில் அழைத்துச் செல்பவன், முருகன் எனும் தோடர் இனத்தைச் சேர்ந்த இளைஞன். இந்தப் பயணத்தினூடாகத் தோடர் பழங்குடியின் வாழ்வு பற்றியும், நீலகிரியைப் பற்றியும், அங்கு வாழும் உயிரினங்கள் பற்றியும், பல கூடுதல் விபரங்களை இவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

இவர்களின் சாகசப்பயணம் வெற்றி பெற்றதா? இப்பயணத்தின் போது, இவர்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை இவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? என்பவற்றைச் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், சொல்லும் நாவல். 13 வயதுக்கு மேற்பட்டோர் வாசிக்கக் கூடிய நாவல்.

வகை – மின்னூல்இளையோர் நாவல் மின்னூல்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:- இணைப்பு:-அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B09Y4MTRV6
விலைரூ 49/-
Share this: