வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

Kanamal_Pona_Sirakugal

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போட்டியில் பரிசு வென்றவர்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினோம்.

மேலும் பரிசு வென்ற கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் எண்ணத்துடன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வர விரும்பினோம். அப்பணி இனிதே நிறைவடைந்து நூல் வெளிவந்து விட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்கின்றோம்.  கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்களுக்கு, ஒரு பிரதி இலவசமாக விரைவில் அனுப்பி வைக்கப்படும். 

இதில் 12 சிறுவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன.  கதைகளை நன்றாக உள்வாங்கி, இவற்றுக்கு 13 மாணவர்கள் வரைந்த பொருத்தமான, அழகான கருப்பு வெள்ளை ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! முதல் பரிசு பெற்ற ‘அனுக்கிரஹா கார்த்திக்’ எழுதிய கதையின் பெயரே, புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்நூலின் அழகான அட்டைப்படத்தை உருவாக்கியவர், சுட்டி உலகத்தின் ஆசிரியர் கீதா மதிவாணன். அருமையாகப் புத்தக வடிவமைப்பு செய்தவர் திரு கன்னிக்கோவில் இராஜா. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!

இப்போட்டியில் கதை எழுதிய சிறுவர்கள் தொடர்ந்து எழுதி, எழுத்தை வசப்படுத்த இந்நூல் உந்துசக்தியாக விளங்கும். அவர்கள் தொடர்ந்து எழுதி, தங்கள் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இவர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இப்போட்டி குறித்த தங்கள் எண்ணங்களை எங்களுக்கு எழுதினால் மகிழ்வோம். இப்போட்டியில் பங்குப் பெற்றுச் சிறப்பித்த அனைவருக்கும், எங்கள் நன்றியும், அன்பும்.

அன்புடன்,

ஆசிரியர்

சுட்டி உலகம்.

Share this:

4 thoughts on “வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

  1. குழந்தைகளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த நூல். தங்களின் பாராட்டுகளை மிக பிரமாண்டமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். மனம் நிறைந்த நன்றிகள் .
    🙏🙏🙏🙏🙏

  2. போட்டி நடத்தி அதை வெற்றிகரமாக முடித்து, அதில் தேர்ந்தெடுத்த கதைகளுக்கு ஏற்ப மாணவர்களை வைத்தே படம் வரைந்து என எல்லா விஷயமும் அடிதூள். மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்

  3. சிறுவர்களை எழுத தூண்டுவதும் அதன் கற்பனைக்கேற்ப சிறார்களையே வரையச்செய்வதும் ஆகப்பெருப்பணி. தமிழ் குழந்தை இலக்கியத்தில் முன்னோடியான அழ.வள்ளியப்பா வழியில் இன்னும் படிகளை தாண்டிச் செல்ல வாழ்த்துகள்.
    வாண்டுமாமா நினைவாக அடுத்து ஏதும் செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி உங்கள் சேவைக்கு…

  4. புத்தகம் சிறப்பாக வந்துள்ளது. வடிவமைத்த கன்னிக்கேவில் இராஜா அவர்களுக்கும் இனைந்து புத்தகத்தை தொகுத்த கலையரசி அவர்களுக்கும் பாராட்டுகள்…
    இளம் எழுத்தாளர்களுக்கும் கதைக்கு ஏற்ப ஓவியம் வரைந்த குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்….

Comments are closed.