சகி வளர்த்த ஓகி

Saki_oki_pic

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற கதை.

யாரும் இது வரை வளர்க்காத விலங்கு ஒன்றைச் செல்லப் பிராணியாகத் தன் வீட்டில் வளர்க்க வேண்டும் என்று, சிறுவன் சகி ஆசைப்படுகிறான். அதன் பெயர் தான் ஓகி.

அவன் தேர்ந்தெடுத்த விலங்கை, வீட்டில் வளர்க்க முடியாது என அப்பாவுக்குத் தெரியும். ஆனால் சகி பிடிவாதமாக இருக்கிறானே! அவருடைய பிரச்சினையை, ஒரு முனிவர் தீர்த்து வைக்கிறார். அந்த விலங்கைக் குட்டியாக மாற்றிக் கொடுக்கிறார். கூடவே “அதற்கு நீர் மட்டும் தான் கொடுக்க வேண்டும்;சாப்பாடு கொடுத்தால் வளர்ந்துவிடும்” எனவும் எச்சரிக்கிறார்.

ஆனால் முனிவரின் எச்சரிக்கையை மீறி, ஒரு நாள் சகியின் நண்பன், ஒரே ஒரு சோற்றுப் பருக்கையை, ஓகிக்குக் கொடுத்துவிடுகிறான். “அச்சச்சோ! அதுக்கப்புறம் என்ன ஆச்சு?” என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறதல்லவா? கதையை வாங்கி வாசியுங்கள்.

விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த வண்ணப்படக்கதை.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்விழியன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 8778073949
விலைரூ 30/-

Share this: