‘சுட்டி உலக’த்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

1st_birthday_wishes

இன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்,  ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது!

எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு மாதமும், சிறார் நூல்களின் அறிமுகப் பதிவுகள் வெளியாகியுள்ளன. தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தைத் துவக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோருக்கு, இப்பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. 

எங்களின் இந்த நூல் பரிந்துரைகள், புத்தகக் காட்சியின் போது, குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாக இருந்தன என்று பெற்றோர் சிலர் அனுப்பிய மெயிலைப் பார்த்து, எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதாக மகிழ்கின்றோம்!

மேலும் ‘சுட்டி உலகம்’ சார்பாக வெளியாகும் யூடியூப் காணொளிக் காட்சிகளும், தொடர்ந்து குறிப்பிட்ட தேதிகளில் வெளியாகியுள்ளன. சில காணொளிகள் அதிகபட்சமாக 16000 வரை பார்வைகளைப் பெற்றுள்ளன என்பதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! மிகவும் குறுகிய காலத்தில், இந்த அளவுக்குப் பார்வைகளைப் பெறுவது, எங்களைப் பொறுத்தவரை ஒரு மகத்தான சாதனையே!

இந்த ஓராண்டுக்குள்ளேயே சிறுவர்க்கான கதைப்போட்டியை வெற்றிகரமாக நடத்திப் பரிசு கொடுத்து ஊக்குவித்ததும், எங்களுடைய இன்னொரு சாதனை! 

இன்னும் தொடர்ந்து பயணிப்போம்,

நன்றியுடன்,

ஆசிரியர் குழு,

சுட்டி உலகம்.

Share this:

6 thoughts on “‘சுட்டி உலக’த்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 1. வாழ்த்துகள்..தங்களின் சுட்டி உலகம் மென்மேலும் வளரட்டும்…

   1. வணக்கம். மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்,
    ஆசிரியர்
    சுட்டி உலகம்.

  1. தங்கள் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றியும் அன்பும் புவனா.
   அன்புடன்
   ஆசிரியர்
   சுட்டி உலகம்

 2. சிறுவர்களுக்களை சீரிய முறையில் ஊக்குவிக்கும் சிறந்த உலகம் நம் “சுட்டி உலகம்” மென் மேலும் தலைத்தோங்கி குழந்தைகளுக்கு வழிகாட்ட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐.💐💐💐

  1. வணக்கம். மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா!
   நன்றியுடன்
   ஆசிரியர்
   சுட்டி உலகம்.

Comments are closed.