மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!

Schoolnew_pic

இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்!

மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி, உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பன்முகத்திறமையை வளர்த்துக் கொள்ளப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம்.

ஆங்கில மீடியத்தில் படித்தாலும், நம் தாய்மொழியான தமிழை அறிந்து கொள்வதிலும் அக்கறை காட்டுங்கள். தமிழ் தான் நம் அடையாளம் என்பதை எந்நாளும் மறவாதீர்!

சுட்டிக் குழந்தைகளுக்கும், அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும், எங்கள் அன்பான வாழ்த்துகள்!

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Comments are closed.