பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

Pootham_pic

ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர்.  ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத் தேடிச் செல்கின்றனர்.

வழியில் அவர்கள் பலவிதமான சவால்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது. புதையலைக் கண்டுபிடிக்கச் சில புதிர்களை அவர்கள் விடுவித்தாக வேண்டும்; பயங்கரமான பூச்சிகள் நிறைந்த சுரங்கப்பாதை வழியே, பயணம் செய்ய வேண்டும்.

அவர்களின் அந்தச் சாகசப்பயணம் வெற்றி பெற்றதா? புதிர்களை அவர்கள் எவ்வாறு விடுவித்தார்கள்? அவர்களால் பூதம் காத்த புதையலைக் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பனவற்றை, இந்நாவல் சுவாரசியமாக விவரிக்கிறது. கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத அளவுக்கு விறுவிறுப்பும், வேகமும் கொண்ட நாவல்.

கதையின் வழியே இயற்கை, சூழலியல், மலையில் வாழும் சில உயிரினங்கள் குறித்த தகவல்கள், நட்பின் மகத்துவம், பகிர்ந்துண்ணலின் அவசியம், தமிழின் மேன்மை, அன்றாட அறிவியல் ஆகியவற்றைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ள உதவும் இளையோர் நாவல்.    

வானம் பதிப்பகம், சென்னை மூலம், தரமான வடிவமைப்பில் வெளிவந்துள்ள இந்நாவலை, அவசியம் வாங்கிச் சிறுவர்க்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89 செல் +91 91765 49991
விலைரூ 80/-
Share this: