நாராயணி சுப்ரமணியன்

Narayani_writer

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.  பிரபல இதழ்களிலும், நாளிதழ்களிலும், குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார்.

‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’, ‘கடலும் மனிதரும்’, ‘விலங்குகளும் பாலினமும்’ ‘ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.     

Share this: