வங்கிக்குச் செல்வோமா?

Vankikku_pic

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டது

அந்த 59 நூல்களில் ‘வங்கிக்குச் செல்வோமா?’ என்ற இக்கதை நூலும் ஒன்று. இது 5-8 வயது சிறார்க்கானது.

முத்துவிற்கு எட்டு வயது. அவனது பிறந்த நாளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பணத்தை, அவன் ஒரு உண்டியலில் சேர்த்து வருகின்றான். பணம் சேர்த்துச் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது அவன் ஆசை.

அவன் அப்பா மூலம் வங்கியில் பணம் சேமிப்பது பற்றி, முத்து தெரிந்து கொள்கிறான். குழந்தைகளுக்கு வங்கி என்றால் என்ன என்ற சிறு அறிமுகத்தை, ஒரு சின்னக் கதை மூலம், இந்நூல் விளக்குகின்றது.

படங்கள் நிறைந்து, வார்த்தைகள் குறைவாக இருப்பதால், சின்னக் குழந்தைகள் வாசிக்க ஏற்றது. இந்நூலுக்கு ஓவியம் வரைந்திருப்பவர் பாலாஜி.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடுதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 68, ஈ.வெ.கி.சம்பத் மாளிகை,கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600006
விலைரூ 25/-
Share this: