மலைச்சிறகன்

Malaisirakan_pic

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டது

அந்த 59 நூல்களில் ‘மலைச்சிறகன்’ என்ற இக்கதை நூலும் ஒன்று. இது 9-11 வயது சிறார்க்கானது.

முகில் எட்டாம் வகுப்பு மாணவன். அவன் ஆசிரியர் பூச்சிகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வரச் சொல்கிறார். அவன் இணையத்திலிருந்து பூச்சிகள் பற்றிய தகவல்கள் திரட்டி எழுதிவிடலாம் என அலட்சியமாக இருக்கிறான். ஆனால் அன்று காலையிலிருந்து நாள் முழுக்க இணையம் வேலை செய்யவில்லை. மறுநாள் கட்டுரையை எடுத்துச் சென்றாக வேண்டும்.

கடைசியில் என்ன ஆனது? ஆசிரியர் சொன்னபடி முகில் கட்டுரையை எழுதி எடுத்துச் சென்றானா? என்று தெரிந்து கொள்ள, இக்கதையை வாசியுங்கள்.

வழவழப்புத் தாளில், பெரிய எழுத்துகளில் வண்ணப்படங்களுடன் கூடிய அருமையான வடிவமைப்பு.பாடநூல் கழக வெளியீடு என்பதால், விலையும் மிக மலிவு. ஃபோட்டோ போல, மிக அருமையாக ஓவியம் வரைந்திருப்பவர், ஓவியர் சூர்யராஜ்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடுதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 68, ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, கல்லூரி சாலை,நுங்கம்பாக்கம்   சென்னை-600006.
விலைரூ 25/-
Share this: