
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் – தொகுப்பு-1 (கங்காரு முதல் வல்லபி வரை)
ஆஸ்திரேலியா பிற கண்டங்களிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து தனித் தீவாக இருப்பதால், உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அதிசய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளின் சிறப்பு அம்சம், இவை மார்சுபியல்
[...]