நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

Greta Thunberg_pic

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா துன்பர்க் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளை, சு.அருண் பிரசாத் தமிழில் அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

ஐ.நா சபை, பிரிட்டன் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடு போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த 5 இடங்களில், இவர் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பேரழிவிலிருந்து இப்புவியைக் காக்க வேண்டும் என்று தனியாளாகப் போராடத் துவங்கிய இவரது ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ “Fridays For Future” என்ற போராட்டம், உலகமுழுக்க மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.

அவர் தம்மைப் பற்றி கூறுவது இது:-

“நான் அதிகநேரம் யோசிப்பேன்.  சிலரைப் போல் என்னால் எல்லா விஷயங்களையும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.  அவை என்னைக் கவலையிலும், சோகத்திலும் ஆழ்த்தும்.  என்னுடைய சிறுவயதில் ஞெகிழியால் கடல் மாசுபடும் படங்கள், பனிக்கரடிகள் உணவில்லாமல் பசியால் வாடுவது போன்றவற்றை, என் ஆசிரியர்கள் காண்பித்தார்கள்.  அவற்றையெல்லாம் பார்த்து நான் அழுதேன்….அவை என் மனதை விட்டு அகலவில்லை” என்கிறார்.   

இவருடைய உரைகளிலிருந்து கொஞ்சம்:-

“நான் பள்ளியில் இருக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவர்களுள் சிலர் நான் கால விஞ்ஞானியாகி, இந்தப் பிரச்சினையைத் “தீர்க்க” வேண்டும் என்று சொல்கின்றனர்.  ஆனால் காலநிலை நெருக்கடி ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்டது. நம்மிடம் உண்மையும் தரவுகளும் ஏற்கெனவே தீர்வுகளாக இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் விழித்துக் கொண்டு செயலாற்றுவதே”. 

மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த சூழலியல் தொகுதிகளும் சிதைந்து கொண்டிருக்கின்றன.  நாம் பெரும் பேரழிவின் தொடக்கத்தில் இப்போது இருக்கிறோம்.  இந்த நிலையில் தான் நீங்கள் எல்லாரும் பணத்தைப் பற்றியும், நீடித்த பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனைக் கதைகளையும், பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தைரியம் உங்களுக்கு?” இவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடிக் கேள்வி!.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்தும், சூழல் சீர்கேட்டிலிருந்து புவியைக் காக்கப் போராடும் நம்பிக்கை நட்சத்திரம் கிரெட்டா துன்பர்க்கைக் குறித்தும், தெரிந்து கொள்ள அவசியம் வாங்கி வாசியுங்கள்.  

வகைகட்டுரை மொழிபெயர்ப்பு அபுனைவு
ஆசிரியர் தமிழாக்கம்கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) சு.அருண் பிரசாத்
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08D6X8816
விலை₹49/-
Share this: