சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

Darwin_pic

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் சார்லஸ் டார்வின் எனும் அறிவியல் அறிஞர்.   

எச்.எம்.எஸ்.பீகிள் என்ற கப்பல், இங்கிலாந்திலிருந்து நீண்ட தூர கடற்பயணம் துவங்கிய போது, அக்கப்பலின் இயற்கையாளராகப் பணியமர்த்தப்பட்ட டார்வினுக்கு, வயது 22 மட்டுமே. 

அந்தப் பயணத்தின் போது டார்வின் என்னென்ன விதமான உயிரினங்களின் மாதிரிகளைச் சேகரித்தார்?  பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் வலுவாகவும் வாழும் சூழலுக்கு ஏற்றவகையிலும் மாறியிருப்பதைக் கண்டுபிடிக்க அந்தக் கடற்பயணம், அவருக்கு எவ்விதம் உதவியது? கலாபகஸ் தீவில் அவர் கண்ட தனித்துவமான உயிரினங்கள் யாவை?  கலாபகஸ் தீவில் அவர் சேகரித்த கூம்பலகன் பறவையின் பல இனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த டார்வின், கண்டுபிடித்த கோட்பாடு என்ன? என்பது போன்ற விபரங்களைச் சிறுவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், கதை போலச் சுவாரசியமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

சிறாரை வாசிப்பின் பக்கம் நகர்த்த ஓங்கில் கூட்டம் பல்வேறு தலைப்புகளில் சிறு புத்தகங்களை வெளியிட்டு வருகின்றது.  12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், வாசித்துப் புரிந்து கொள்ள ஏதுவாக எளிமையான நடையில், கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் எழுதப்பட்டுள்ள மின்னூல். 

அறிவியலில் சிறுவர்க்கு ஆர்வம் ஏற்படுத்த உதவும் மின்னூல்.    

வகை – மின்னூல்கட்டுரை – மின்னூல்
ஆசிரியர்அன்பு வாகினி
வெளியீடு –
அமேசான் கிண்டில் இணைப்பு
ஓங்கில் கூட்டம்
https://www.amazon.in/dp/B09NZ52VBL
விலை₹ 49/-

Share this: