கு.காமராஜர்-காங்கிரஸ்: 1921-1967 (Tamil Nadu Political History)

Kamarajar_pic

தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு.  அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு, 

இக்குறையைப் போக்கும் விதமாகக்  காமராஜரின் வாழ்வு குறித்தும்,  இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்து, காங்கிரஸ் ஆட்சியின் சகாப்தம் முடிவுற்று, திராவிட ஆட்சி ஏற்பட்ட காலம் வரையிலான,  தமிழக அரசியல் வரலாறு குறித்தும்,  இளையோர் சமுதாயம் தெரிந்து கொள்ளும் விதமாக, எளிமையான நடையில், கட்சி சார்பின்றிச் சுவாரசியமாக  இந்நூலில் எழுதியிருக்கின்றார், ஆசிரியர் ஜோதிஜி. 

காமராஜரின் எளிய வாழ்வு, தமக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாத மாண்பு, அவர்தம் சீரிய பணிகள் ஆகியவை குறித்தும், காங்கிரசின் அரசியல் வரலாறு குறித்தும், தெரிந்து கொள்ள, அவசியம், இந்நூலை வாசிக்க வேண்டும். எதிர்காலத்தில் அரசியலில் பங்கேற்று நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பேற்க வேண்டிய இளைய தலைமுறை, நம் அரசியல் வரலாறு குறித்து, அறிந்திருத்தல் அவசியம் அல்லவா?.

12 –18 வயதினருக்கானது என்று இந்நூலில் குறித்திருந்தாலும், பழைய தமிழக வரலாறு தெரியாத வயது வந்தோரும், வாசிக்க வேண்டிய புத்தகம்.

வகைஇளையோர் அரசியல் வரலாறு
ஆசிரியர்ஜோதிஜி திருப்பூர்
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08QCR4TBN
விலை₹ 104/-
Share this: