புவனா சந்திரசேகரன்

Puvana_pic

சி.புவனா என்ற பெயரில் எழுதும் இவரின் முழுப் பெயர் புவனா சந்திரசேகரன். தில்லி அருகே உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் இவர் கணிதம் படித்து, முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். பின்பு கணித ஆசிரியராகப் பணிசெய்தார். 

கடந்த மூன்றாண்டுகளாக இணைய தளங்களிலும், பூஞ்சிட்டு சிறுவர் மாத மின்னிதழிலும் (https://poonchittu.com) தொடர்ந்து எழுதி வருகிறார்.  இவரது படைப்புகள், பல பரிசுகளை வென்றுள்ளன. மாயவனம் (சிறார் நாவல்), மின்மினியும் பாட்டியும், பறக்கும் யானை, கோல்டன் தமிழச்சி, சிறுவர் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் என ஆறு சிறுவர் மின்னூல்கள், இதுவரை அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளன.  இதில் ‘கோல்டன் தமிழச்சி’ விஸ்வரூபம் போட்டியில் பரிசு வென்றது.

இவர் கவிதை, சிறுகதை, புதினம் என்று பலவற்றை எழுதும் பன்முகத்திறமை பெற்றிருந்தாலும், சிறுவர்க்கான படைப்புகளைப் படைப்பது, அதிக மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது என்கின்றார்.

Share this: