படகோட்டி எறும்பு

Padahoti_Erumbu

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது. 

ஒரு நாள் காலையில் ஒரு எறும்பு தன் குடும்பத்துடன் காட்டிற்குச் சென்று, புற்றுக்காக பைன் இலைகளைச் சேகரித்து எடுத்து வரச் செல்கிறது.  திரும்பி வந்து பார்த்தால், அங்கிருந்த எறும்பு புற்றையும், அங்கு வசித்த மற்ற எறும்பு குடும்பங்களையும் காணோம். 

வெள்ளம் அப்பகுதியைச் சூழப்போகிறது என்பதையறியாத அந்த எறும்பு, தன் குடும்பத்துடன் அன்றிரவைக் கழிக்க, ஒரு தற்காலிக வீட்டைக் கண்டுபிடிக்கின்றது.

வீட்டையிழந்த அந்த எறும்பு சந்திக்கும் சவால்களும், அதை எதிர்கொள்ள அது நிகழ்த்தும் சாகசங்களும் தாம் கதை.  வண்ண ஓவியங்களுடன் கூடிய சிறார் கதை.

வகைமொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
ஆசிரியர் – மூலம் தமிழாக்கம்டட்டியானா மக்கரோவா சரவணன் பார்த்தசாரதி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை +91 9444960935
விலை₹ 45/-
Share this: