கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, வங்கிப்பணி செய்து விருப்ப ஓய்வு பெற்ற புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கிறார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர் கவிதை,சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கட்டுரை எனப் பலவகை படைப்புத் தளங்களில் இயங்கி வருகிறார்.
சென்னை வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கும் ‘பராந்தகப் பாண்டியன்’, ‘தென்னவன் பிரம்மராயன்’, ‘காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கம்’ உள்ளிட்ட வரலாற்று நாவல்களின் ஆசிரியர்.
பூஞ்சிட்டு சிறுவர் மாத மின்னிதழில் (https://poonchittu.com) ஆசிரியர் குழுவில் இருக்கிறார். மாயவனம் (சிறார் நாவல்), மின்மினியும் பாட்டியும், பறக்கும் யானை, கோல்டன் தமிழச்சி, சிறுவர் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் என ஆறு சிறுவர் மின்னூல்கள், இதுவரை அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளன. இதில் ‘கோல்டன் தமிழச்சி’ விஸ்வரூபம் போட்டியில் பரிசு வென்றது. ‘வேர்க்கடலை இளவரசன்’ என்ற சிறார் நூலைப் பாரதி பதிப்பகம்,சென்னை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டிருக்கும் சிறார் வாசிப்பு நூல் வரிசையில், இவரது ‘பூனையா? புலியா?’ என்ற நூல் வெளியாகியுள்ளது.