காட்டிலிருந்த ஒரு புலிக்குட்டிக்கு வித்தியாசமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு வீட்டில் நாய்க்குப் போட்ட புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது. அது மிகவும் பிடித்துப் போகவே தொடர்ச்சியாக அதைத் தின்னத் துவங்குகிறது. “நாமெல்லாம் மாமிசப் பட்சிணிகள்; சோறு தின்னக் கூடாது,” என அம்மா புலி கடுமையாக எச்சரித்தும், புலிக்குட்டிக்கு ஆசை விடவில்லை. அதற்குப் பிறகு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.
நாம் தின்னும் உணவைப் புலி தின்னத் துவங்கினால் என்ன ஆகும் என்ற வித்தியாசமான கற்பனையில் எழுதப்பட்ட ஜாலியான கதை. வாசிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
வகை | சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | அகிலாண்ட பாரதி.S |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B084TC81XC |
விலை | ₹ 49/- |