பொன்னியின் செல்லச் சிட்டு

Ponniyin_Chella_Pic

2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை ஊட்டுகின்றன. தம்பி பிறந்த செய்தி கேட்டு, அவள் பாட்டி வீட்டுக்குச் சென்று விடுகின்றாள்.

சில நாட்களுக்குப் பிறகு அவள் வீடு திரும்பிய சமயம், கூடு காலியாக இருக்கின்றது. மீண்டும் சிட்டுக்குருவி வரவேயில்லை. அந்த வீட்டை விட்டுப் போக மனசில்லாமல் புது வீட்டுக்குக் குடி பெயர்கிறாள். ஆனால் புது வீட்டிலும் அவளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கின்றது!

அது என்ன ஆச்சரியம் என்பது மீதிக்கதை. இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும், குழந்தைகள் கூடுதல் தகவல்களை இக்கதையை வாசிக்கும் போது, தெரிந்து கொள்வார்கள்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்ஆதி வள்ளியப்பன்
வெளியீடுபயில் பதிப்பகம், சென்னை-17 செல் 7200050073
விலைரூ 33/-
Share this: