இது இரண்டு பறவை நண்பர்களின் கதை. நாரா என்பது உள்ளூர் பறவை. சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை. ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய நண்பர்களாகிவிடுகின்றன.
பனிக்காலம் முடிந்தவுடன் சாரா அதன் கூட்டத்துடன் தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறது. அடுத்த ஆண்டு அதே இடத்தில் சந்திப்போம் என்று சொல்லி, இரண்டும் பிரிய மனமின்றிப் பிரிகின்றன. ஆனால் அடுத்த ஆண்டு குளிர்காலத்தில் வலசை வந்த சாரா, அந்த ஏரியே காலியாகக் கிடப்பதைப் பார்த்து, நாராவுக்கும், அங்கிருந்த பறவை கூட்டத்துக்கும் என்ன ஆனது என்று தெரியாமல், அதிர்ச்சி அடைகின்றது.
நாராவுக்கு என்ன ஆயிற்று? இரண்டும் மீண்டும் சந்தித்தனவா? என்பதை அறிந்து கொள்ள கதையை வாசியுங்கள். நீர் மாசுபடுவதால் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை விளக்கி, விழிப்புணர்வூட்டும் கதை.
சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான ஆங்கிலத்தில், நட்பின் மகத்துவத்தைச் சொல்லும் சுவாரசியமான சிறுவர் கதை.
வகை | ஆங்கில சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08JH8NZ71 |
விலை | ₹ 50/- |