எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு இரண்டிலும் தடம் பதித்துள்ள இவர், எழுத்துக்காகவும், சூழலியல் பணிக்காகவும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். ‘காடோடி’, ‘நீர் எழுத்து’, ‘சூழலும் சாதியும்’ ஆகியவை இவருடைய புகழ் பெற்ற நூல்கள். இவரது நூல்கள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.
சிறுவர்க்கு இயற்கை, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்துப் ‘பசுமைப்பள்ளி’ என்ற நூலில், விளக்கி எழுதியுள்ளார்.