நாராய் நாராய்

Naarai_pic

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன. 

பறவைகளின் பெயர்கள் முதல், வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களைக் கூர்ந்து நோக்கிப் பண்டைத் தமிழர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள் என்று சொல்லும் ஆசிரியர், அதற்குச் சத்திமுற்ற புலவரின் “நாராய், நாராய், செங்கால் நாராய்!” என்ற தமிழ்ப்புலவரின் பாடலை மேற்கோள் காட்டுகின்றார்..

இதில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன.  கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்று தமிழகத்தில் அமைந்துள்ள பறவை சரணாலயங்கள் குறித்து, இப்புத்தகம் பேசுகின்றது.  சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள் பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும், அக்கறையையும் குறித்து, வியந்து பேசுகிறார் ஆசிரியர்.  தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம்.   

பறவை கூர்நோக்குதல் வெறும் பொழுதுபோக்கு அல்ல இது காட்டுயிர் அறிவியலின் ஒரு பிரிவு பறவை நோக்குதலின் முக்கிய நோக்கம், அதன் பழக்க வழக்கத்தை அறிவதும், பல்லுயிரி சுழற்சியில் அவற்றின் பங்கேற்பைப் புரிந்து கொள்வதுமே என்கிறார் ஆசிரியர். நம்மூர் பறவைகளைச் சரியாக அடையாளம் காண்பதற்கு, அவற்றின் தமிழ்ப்பெயர்களை அறிவது அவசியம்.  அதற்கு இப்புத்தகம் உதவி செய்யும்..

சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையில் நாட்டம் ஏற்படுத்த உதவும் புத்தகம்.

வகைகட்டுரை அபுனைவு
ஆசிரியர்ஆதி வள்ளியப்பன்
வெளியீடுபூவுலகின் நண்பர்கள் –044-24839293 தடாகம்,சென்னை-41 +91 8939967179
விலை₹ 50/-
Share this: