குட்டிச் செடி

Kuttichedi_pic

இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள்.

‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று காற்று சொன்னதால், பயந்து அழும் ஓர் இலையின் கவலையை, ‘அந்த இலையின் கவலை’ என்ற முதல் கதை சொல்கிறது.

மந்திரமலையில் இளவரசி நடக்கும் இடமெல்லாம், பூக்கள் பூத்ததன் இரகசியம் என்ன? ஒரே ஒரு ராபின் குருவியின் பாடல் மட்டும், மிக மிக இனிமையாய் இருந்தது எப்படி? காட்டில் வெட்டப்பட்டு, நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட, பைன் மரத்தின் அனுபவங்கள் யாவை? நோயுற்றிருந்த குழந்தையைக் குணப்படுத்திய அல்லிப்பூ, முடிவில் என்னவாக மாறியது? போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு விடை தெரிய, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகைமொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள்
மூலம் – ஆங்கிலம்தமிழாக்கம்: ஞா.கலையரசி
வெளியீடு:-பாரதி பதிப்பகம், சென்னை—92 செல் +91 93839 82930
விலைரூ 85/-
Share this: