ஒற்றை அண்டங்காக்காய்  

Andankakkai_pic

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால், பேய், பிசாசு அண்டாது போன்று, நம் சமூகத்தில் புழங்கும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை நம்பக் கூடாது; அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை ‘ஒற்றை அண்டங்காக்காய்’ என்ற முதல் கதை, விளக்குகிறது.

‘புளிக்குழம்பு சாப்பிட்ட புலி’ என்ற கதையில், ஒரு நாள் ஒரு புலிக்குட்டி, புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது. அது மிகவும் பிடித்துப் போகவே, தொடர்ந்து தின்கிறது. நாம் உண்ணும் உணவை, விலங்குகள் தின்னத் துவங்கினால் என்னாகும் என்ற வித்தியாசமான கற்பனையில், எழுதப்பட்ட ஜாலியான கதை. 

‘என் பூ எங்கே?’ என்ற கதையில், பூக்களின் மகரந்தச் சேர்க்கை குறித்தும், ‘மன்னிக்கலாமா?’ என்ற கதையில், உணவுச்சங்கிலி குறித்தும், சிறுவர்கள் தெரிந்து கொள்வார்கள். சூடான் நாட்டு ஹசனும், ரஷ்ய நாட்டு மார்ட்டினும், தங்கள் அனுபவத்தில் என்ன தெரிந்து கொண்டனர் என்பதை இரு மொழிபெயர்ப்புக் கதைகள் சொல்கின்றன. அழகிய ஓவியங்கள் கொண்ட இச்சிறுவர் கதைப் புத்தகத்தை வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்Dr. S. அகிலாண்ட பாரதி
வெளியீடு:-பாரதி பதிப்பகம், சென்னை-92 செல் +91 93839 82930
விலைரூ 100/-
Share this: