கடலுக்கடியில் மர்மம்

Kadalukkadiyil_pic

இந்தச் சிறுவர் நாவல், 2023 ஆம் ஆண்டுக்கான, SRM தமிழ்ப்பேராயத்தின் அழ வள்ளியப்பா விருது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மனிதர்கள் கடல் நீரில் வேதிக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும், சாயம் பூசப்பட்ட கடவுள் சிலைகளையும், நெகிழிகளையும் போட்டுக் குப்பை தொட்டியாக்குவதால், கடல் நீர் மாசுபடுவதையும், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதையும், இது பேசுகின்றது. 

யாழினி, தீரன் இரண்டும் கடலில் வாழும் தங்க மீன்கள். யாழினியின் அம்மா வெண்ணிலாவோ, கடலைப் பற்றியும், மனிதர்களிடமிருந்து தங்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும், ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி. சாயம் பூசப்பட்ட சிலைகளைக் கடலில் போடுவதால், சாயம் கரைந்து மீன்கள் சாகின்றன. எனவே வெண்ணிலாவும், தங்கமீன்களும் பாதுகாப்பான இடத்துக்குப் பயணம் செல்கின்றன.

பயணம் செல்லும் வழியில், இவை பல அபூர்வ உயிரினங்களைச் சந்திக்கின்றன. ஜெல்லி மீன், நீலத் திமிங்கலம், கடற்குதிரை, கடற்பசு பற்றியெல்லாம், அறிமுகம் செய்யும் ஆசிரியர், பவளப்பாறைகள் குறித்தும், பெர்முடா முக்கோணம் குறித்தும், சிறுவர்க்கு விளக்குகிறார்.

கடல்வாழ் உயிரினங்களில் நீண்டகாலம் வாழக் கூடியது எது? மிகப் பெரியது எது? போன்ற பொது அறிவுச் செய்திகளையும், சிறுவர்கள் இந்நாவலை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

‘கேள்வி கேட்கும் சமூகமே, சிறந்த சமூகம்’ ‘மாற்றத்திற்கு உட்படும் ஒன்றே, மகத்துவம் வாய்ந்ததாக மாறும்’ ‘பயணம் வாழ்வில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும்’ போன்ற வாழ்வியல் கருத்துகளையும், கதையின் வழியே ஆசிரியர் சொல்லியிருப்பது சிறப்பு.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்சரிதா ஜோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 (+91 8778073949)
விலைரூ 80/-
Share this: