பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன.
16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன.
பூனையைச் சுட்டிச் சுண்டெலி, எப்படி ஏமாற்றியது? காட்டில் மந்திரவாதி போட்ட மந்திரத்தால், வாத்தாக மாறிய சிங்கம், மீண்டும் சிங்கமாக மாறியதா? சேவலாக மாறிய யானை, மீண்டும் யானையாக மாறியதா? என்றெல்லாம், தெரிந்து கொள்ள ஆசையா? இந்த கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்
இரண்டு மூன்று வார்த்தைகள் மட்டுமே கொண்ட சின்ன வாக்கியம், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்கள், ஒரே சொற்கள் கதையில் மீண்டும் மீண்டும் வருதல் ஆகியவை, இந்நூலின் சிறப்பு அம்சங்கள்.
மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 8778073949 |
விலை | ரூ 20/-. |