சுதந்திர நாள் வாழ்த்துகள்!

Independence_pic

அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்!

இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம்.

நாங்குநேரியில் சாதிவெறி காரணமாக, மாணவர்களே தம் சக வகுப்பு மாணவனைக் கொலை வெறி கொண்டு, அரிவாளால் வெட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பிறந்த இம்மண்ணில் சாதி,மதம்,மொழி,இனம் ஆகியவற்றால் பிளவுபடாமல், வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். சக மனிதனை மதிக்காத, தன்னல மிகுந்த வெறுப்பு மனநிலையைக் களைந்து, எல்லாரும் சமம் என்கிற எண்ணத்தை மனதில் நிறுத்தி, அன்பு செலுத்தக் கற்றுக்கொள்வோம்.

விடுதலை என்பது அதிகாரத்துக்கு எதிரானது. எனவே பாசிசத்தை வீழ்த்தவும், சமத்துவம்,சகோதரத்துவம் நிலைக்கவும், இந்நாளில் உறுதி ஏற்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: