ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.
அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு, வெளியே போய் விளையாடலாம்; ஆனால் பக்கத்து மெக்ரெகர் தோட்டத்துக்கு மட்டும் போகக் கூடாது என எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறது. ஆனால் மற்ற மூன்று குட்டிகளும் அம்மா முயல் சொன்ன மாதிரி வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்புகின்றன. ஆனால் குறும்புத்தனம் நிறைந்த பீட்டர் முயல், நேராக மெக்ரெகர் தோட்டத்துக்குச் சென்று வாசல்கதவுக்குக் கீழிருந்த இடைவெளியில், உடம்பைக் குறுக்கி உள்ளே நுழைகின்றது. மெக்ரெகர் கண்ணில் அது படவே, விடாமல் ஓடித் துரத்துகின்றார். அவரிடமிருந்து தப்பிக்க பீட்டர் குறுக்கும் நெடுக்கும் ஓடுகின்றது. பீட்டர் அவரிடமிருந்து தப்பித்ததா? என்றறிய கதையை வாசியுங்கள்.
பீட்டர் முயலின் குறும்புத்தனமும், சாகசமும் நிறைந்த விறுவிறுப்பான சிறுவர் கதை.
வகை – மொழிபெயர்ப்பு | சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | ஆங்கிலம் – Helen Beatrix Potter தமிழாக்கம்- ஞா.கலையரசி |
வெளியீடு | அமேசான் கிண்டில் மின்னூல் இணைப்பு https://www.amazon.in/dp/B08NCXRN8X |
விலை | ₹ 50/- |