மலையின் மீது அமைந்துள்ள ஆகாய கோட்டையில், மன்னர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்றுவிடுவதாகவும், ஆடு மேய்க்கும் சிறுவன் வேலு வழியாக, ஆதவனும் அவன் கூட்டாளிகள் மூவரும் கேள்விப்படுகின்றனர். வேலுவின் வழிகாட்டுதலோடு அச்சிறுவர் நால்வரும், அந்தப் புதையலைத் தேடிப் புறப்படுகின்றனர்.
வழியில் அவர்கள் வாசிக்கும் குறிப்புகளை வைத்து வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்மொழி, காடுகள், இயற்கை ஆகியவை குறித்த பொது அறிவுத் தகவல்கள் அடங்கிய நாவல்.
சிறுவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? வழியில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அந்தப் பூதத்திடமிருந்து தப்பித்தார்களா? தெரிந்து கொள்ள கிண்டிலில் நாவலைத் தரவிறக்கி வாசியுங்கள்.
விறுவிறுப்பும், சாகசமும் நிறைந்த இளையோர் நாவல்.
வகை | சிறார் (மின்னூல்) நாவல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு இணைப்பு | அமேசான் (கிண்டில்) மின்னூல் https://www.amazon.in/dp/B08RY6R5V4 |
விலை | ₹ 50/- |