சிறுவர்க்கான போட்டி அறிவிப்பு!

Australia_competition

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்(WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது.  

கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் ஆகிய பிரிவுகளில், இப்போட்டி நடக்கின்றது. 18 வயதுக்குட்பட்ட யாரும், இதில் கலந்து கொள்ளலாம்.

படைப்பின் முடிவில் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

கலந்து கொள்ள இறுதித் தேதி ஆகஸ்ட் 15. (15/08/2022).

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- wtc.amav@gmail.com

படைப்பை ஒருங்குறி (Unicode)எழுத்துருவில் தட்டச்சு செய்து, வேர்டு (Word File) ஃபைலாக அனுப்ப வேண்டும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும், சுட்டி உலகத்தின் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Share this: