இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன. ‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும்,
[...]
(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர்
[...]
இதில் வித்தியாசமான கற்பனையுடன் கூடிய 12 அறிவியல் புனைகதைகள் உள்ளன. இவை ‘கோகுலம்’ இதழில் வெளிவந்தவை. இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைக்காரணம், விநோதமான கற்பனை தானே? ‘ஒரு பூ ஒரு
[...]
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்;
[...]
மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர். தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள்
[...]
200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே
[...]
கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார். ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து,
[...]
சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை
[...]
இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப்
[...]
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர்
[...]