பீம்பேட்கா

Bhimpetka_pic

உதயசங்கர் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ நாவலில் வரும் கேப்டன் பாலுவும், அவன் மாமா மகள் மதுமிதாவும், இந்த நாவலிலும் முக்கிய கதாபாத்திரங்கள். கீழடி நாகரிகம் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, பாலுவுக்கு வரலாற்றில் தீவிர ஆர்வம் வந்து விடுகிறது. அதன் பிறகு பூமியில் உயிர்கள் தோன்றிய வரலாறு குறித்து அறிய, முற்படுகின்றான். ஆதனின் பொம்மையில் வந்த ஆதன் மூலமே, இந்நாவலிலும் பாலு மனிதகுல வரலாறு குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறான்.

பூமியின் வயது 454 கோடி ஆண்டுகள் என்றும், 354 கோடி ஆண்டுக்கு முன்னால், சையானோ என்ற ஒரு செல் பாக்டீரியா தான், உலகில் முதன் முதலில் தோன்றிய உயிரென்றும் பாலு தெரிந்து கொள்கின்றான். தொடர்ந்து ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய மனித இனம் குறித்தும், ஹோமோ சேப்பியன்ஸ் குறித்தும், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் அங்கிருந்து இடம் பெயர்ந்து, வழியில் நியாண்டர்தால் போன்ற வெவ்வேறு மனித இனக்குழுக்களைச் சந்திப்பது குறித்தும் தெரிந்து கொள்கின்றான்.

இந்த மனித இனக்குழு இந்தியாவுக்குள் வந்து, பீம்பேட்காவில் உள்ள பாறை வாழ்விடங்களில் தங்கி வாழ்ந்தது வரையிலான மானுடப் பயணத்தை ஆசிரியர், இந்த இளையோர் நாவலில் விவரித்திருக்கிறார். ஹோமோ சேப்பியன்ஸ் குறித்தும், மனித இனம் தோன்றிய வரலாறு குறித்தும், கதை மூலம் இளையோர் தெரிந்து கொள்ள உதவும் நாவல் இது.      

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம்,சென்னை-89 +91 9176549991
விலைரூ 90/-
Share this: