கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றார்.
இவர் எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் நாவல், 2020ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்றது. தமிழ்நாடு அரசு நடத்தும் ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய பத்திரிக்கைகளுக்குப் பொறுப்பாசிரியராக இருக்கிறார்.
‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘புதையல் டைரி’, ‘பூமிக்கு அடியில் ஒரு மர்மம்’, ‘மந்திரச் சந்திப்பு’ உள்ளிட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.