யாரங்கே பாடுவது?

Yarange_paduvathu_pic

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் உறங்க நினைக்கிறது.  அச்சமயம் வானம்பாடி பாடத் துவங்குகிறது. “நான் ஓய்வெடுக்க வேண்டும்; வேறு எங்காவது போய்ப் பாடமுடியுமா?” என்று ஆந்தை வானம்பாடியிடம் கேட்கிறது.

அப்போது வேறு சத்தம் கேட்கிறது.  “யார் அப்படிச் சத்தம் போட்டது?” என்று வானம்பாடி, ஒவ்வொரு பறவையாக வரிசையாக் கேட்கிறது. அதற்கு நானில்லை என்று பறவைகள் மறுக்கின்றன. அத்துடன் தம் குரல் எப்படி ஒலிக்கும் என்றும் அவை விளக்குகின்றன. கடைசியில் அப்படிச் சத்தம் போட்டது எது என்று வானம்பாடி கண்டுபிடிக்கிறது.

நூலின் இறுதியில் இந்நூலில் இடம் பெற்றுள்ள பறவைகள் பற்றிய விபரங்கள் வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் பற்றியும், பல்வேறு விதமாக அவை எழுப்பும் ஒலி குறித்தும், குழந்தைகள் தெரிந்து கொள்ள உதவும் நூல். மேலும் இயற்கையின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்த, இது போன்ற நூல்கள் பெரிதும் உதவும்.

வகைமொழிபெயர்ப்பு அறிவியல்  சிறுவர் கதை
ஆசிரியர் –
தமிழாக்கம்
ஜென் ஷோஸாங் –
ஆதி வள்ளியப்பன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935
விலைரூ 45/-
Share this: