பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர். கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர். மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர்
‘மணிப்பாப்பா’ (1976), ‘ரத்னபாலா’ (1979) என்கிற 70-களின் இரண்டு பிரபல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகவும், முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும், பணியாற்றியவர்.சிறார்களுக்கான சித்திரக் கதைகள், ஓவியங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.