வாண்டுமாமா (1925-2014)

வாண்டு_மாமா

இவர் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  60 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர்.  எழுத்து, ஓவியம் என்ற பன்முகம் கொண்ட இவர், ‘கோகுலம்’ (1972), ‘பூந்தளிர்’ (1984) என மிகவும் பிரபலமான இரண்டு சிறார் இதழ்களுக்கு, முதல் ஆசிரியராக இருந்தார்.. ஓவியர் செல்லத்துடன் இணைந்து சித்திரக்கதை எனும் வடிவத்தை தமிழில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.

65 நெடுங்கதை, 28 சித்திரக் கதை, 45 அறிவியல் நூல் என 160-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். இவற்றுள் ‘கனவா, நிஜமா?’, ‘ஓநாய்க்கோட்டை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. ‘தோன்றியது எப்படி’ (4 பாகங்கள்), ‘மருத்துவம் பிறந்த கதை’, ‘நமது உடலின் மர்மங்கள்’   ஆகியவை கதையல்லாத பிற முக்கிய நூல்கள்.

Share this: