பூவண்ணன்

Poovannan_pic

இவர் இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியரான இவர்,  நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.  இவரது, ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் புகழ்பெற்றது.  ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்ற நூலை எழுதி, சிறார் இலக்கிய வரலாற்றை, ஆவணப்படுத்தியுள்ளார்.


இவரது ‘உப்பில்லாத பண்டம்’  என்ற நாடகம், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. இவர் எழுதிய ‘ஆலம் விழுது’, ‘காவேரியின் அன்பு’  என்ற இரண்டு சிறார் நெடுங்கதைகளும் ‘நம்ம குழந்தைகள்’, ‘அன்பின் அலைகள்’ என்ற பெயர்களில், திரைப்படமானதுடன் தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருதும், இவருக்குக் கிடைத்தது.

Share this: