தேவி நாச்சியப்பன்

Devi_Natchiyappan

முனைவர் தேவி நாச்சியப்பன் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  தந்தையின் தடம் பற்றிக் குழந்தை இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வரும் இவர், இதுவரை 25 நூல்கள் எழுதியுள்ளார்.  சிறுவயதில், இவர் மொழியாக்கம் செய்த கதைகள், ‘பல தேசத்துக்குட்டிக் கதைகள்’ எனும் தலைப்பில், இவர் திருமண நாளன்று வெளியிடப்பட்டது.  இடையில் செயல்படாமல் நின்று போயிருந்த ‘கவிமணி குழந்தைகள் சங்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பட்டிமன்றம், பாடல், கவிதை எனப் பயிற்சி கொடுத்து வருகிறார்.  ஒட்டு மொத்தக் குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக 2019 ஆம் ஆண்டு ‘பால சாகித்ய யுவ புரஸ்கார் விருது’ இவருக்கு அளிக்கப்பட்டது. 

சாகித்திய பாலபுரஸ்கார் விருதும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும், தமிழ்ச்செம்மல் விருதும் இவர் தொண்டுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். கவிமணி குழந்தைகள் சங்கத்தின் அமைப்பாளராக 30 ஆண்டுகளும், தமிழாசிரியராக 29 ஆண்டுகளும் பணியாற்றியவர். கடந்த முப்பது ஆண்டுகளாகக்  குழந்தைகளுக்காக எழுதுவதையும், நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தொடர்பணியாய் மேற்கொண்டு வருகிறார். ‘புத்தகத் திருவிழா,’ ‘பந்தும் பாப்பாவும்,’ ‘பசுமைப்படை,’ ‘தேன்சிட்டுக்கு என்னாச்சு?’ ‘நடிக்கலாம் வாங்க’ (சிறுவர் நாடகங்கள்) ஆகியவை இவரது சில படைப்புகள்.

Share this: