தேவி நாச்சியப்பன்

தேவி_நாச்சியப்பன்

இவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  இவர் குழந்தைகளுக்காக 12 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  சிறுவயதில், இவர் மொழியாக்கம் செய்த கதைகள், ‘பல தேசத்துக்குட்டிக் கதைகள்’ எனும் தலைப்பில், இவர் திருமண நாளன்று வெளியிடப்பட்டது.  இடையில் செயல்படாமல் நின்று போயிருந்த ‘கவிமணி குழந்தைகள் சங்கத்த்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பட்டிமன்றம், பாடல், கவிதை எனப் பயிற்சி கொடுத்து வருகிறார்.  குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக 2019 ஆம் ஆண்டு ‘பால சாகித்ய யுவ புரஸ்கார் விருது’ இவருக்கு அளிக்கப்பட்டது.  “புத்தகத் திருவிழா”, “பந்தும் பாப்பாவும்”, “பசுமைப்படை” ஆகியவை, குறிப்பிடத்தக்க படைப்புகள்.

Share this: