விசிலடிக்கும் சைக்கிள்

Whistle_pic

இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.  சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப் பத்திரமாக மீண்டும் அதன் கூட்டில் வைக்கின்றது. இருட்டில் தனியாக விடப்பட்ட சைக்கிள், தன் பயத்தைப் போக்க விசிலடித்துக் கொண்டே வீட்டுக்கு வருகின்றது.

‘சூ! சூ! என்று மனிதர்களால் விரட்டப்படும் தெரு நாய்க்குட்டி, அது தான் தன் பெயர் என நினைத்துக் கொள்கிறது.  வைகைப்பாப்பா ஆசையுடன் நட்டு வளர்த்த கொய்யாச்செடி, மரமாகிக் காய்க்கிறது. ஆனால் பழத்தை அணில், பறவை உட்பட, எதற்கும் கொடுக்காமல், பாப்பாவுக்காகக் காப்பாற்றி வைத்துக் காத்திருக்கின்றது.    

காக்கைகளின் டீச்சரே இல்லாத பள்ளிக்கூடம் எப்படியிருக்கும்? பூனையின் சாப்பாட்டையும், தானே தின்றுவிடும் ஜிம்மிக்குப் புத்தி புகட்டியது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கும், இந்நூலை வாசித்தால் பதில் கிடைக்கும். 

இக்கதைகள் வாசிக்கும் குழந்தைகளின் எல்லையில்லாக் கற்பனையைத் தூண்டிவிட்டு, மாயப் புனைவுலகைத் தோற்றுவித்து, அவர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளவை. அவசியம் இக்கதைப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள்; உங்கள் குழந்தைகள் வாசித்து மகிழட்டும்!

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலைரூ 50/-
Share this: