வித்யா செல்வம்

Vidhya_pic

வித்யா செல்வம் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு முடித்துத் தற்போது, சென்னையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ‘பூஞ்சிட்டு’ என்ற சிறார் மின்னிதழின் ஆசிரியர். இதுவரை சில சிறுகதைகள், ஒரு சிறுவர் கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  

‘அப்படியா சேதி?’ என்ற இவரது சிறார் கதைத் தொகுப்பைப் பாரதி பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.

இதில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கதைகள் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.

Share this: