ஊர் சுற்றலாம்

Ursutralam_pic

மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாடுடைய அரசுப்பள்ளி ஆசிரியரான ரா.ராணி குணசீலி, இந்நூலை எழுதியிருக்கிறார். இதில் 16 சிறார் பாடல்கள் உள்ளன.

குழந்தைகளுக்கு இயல்பிலேயே அமைந்துள்ள இயற்கையின் மீதான நேசத்தையும், அனைத்துயிர்களையும் சமமாக நினைத்து அன்பு செலுத்தும் அவர்கள் குணத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, இப்பாடல்கள் அமைந்துள்ளன.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த எளிய சொற்கள் இப்பாடல்களில் பயின்று வருவது சிறப்பு. ராகம் போட்டுப் பாட வசதியாகச் சின்னச் சின்ன சொற்றொடர்களில், இவை அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகக் குழந்தை குருவியை ஊர் சுற்றக் கூப்பிடும் ‘ஊர் சுற்றலாம்’ என்ற முதல் பாடலிலிருந்து, சில வரிகள்:-

“ஆற்று நீரில் குளிக்கலாம்

அயிரை மீனும் பிடிக்கலாம்

கூழாங்கல் பொறுக்கியே

சொட்டாங்கல் ஆடலாம்”

‘வண்டிச்சவாரி’ என்ற இரண்டாம் பாடலில் இடம் பெற்றுள்ள, பானையூர், பையூர், கூடையூர் போன்ற ஊரின் பெயர்களும், வண்டிப்பெயர்களும் அருமை.

“மாமா வர்றார் மாமா வர்றார்

மூங்கில் வண்டியிலே…

கூடையூர் கூட்டிப் போவார்

மூங்கில் வண்டியிலே…”

பல புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளவும், திருத்தமாக உச்சரிக்கவும் இவை போன்ற பாடல்கள் உதவும். அவசியம் வாங்கிக் கொடுத்து, உங்கள் குழந்தைகளைப் பாடச் செய்யுங்கள்.

வகைசிறார் பாடல்கள்
ஆசிரியர்ரா.ராணி குணசீலி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன்,பாரதி புத்தகாலயம்,சென்னை-18 +91 8778073949
விலைரூ 40/-
Share this: