ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது.
வழியில் வந்த எலியிடம், “என் வீடு எங்கேயிருக்கிறது?” என்று கோழிக்குஞ்சு கேட்டது. “தெரியாது” என்று சொல்லிவிட்டு, அது ஓடிவிட்டது. பிறகு ஒரு சாரைப்பாம்பு வந்தது. அதற்கும் கோழிக்குஞ்சின் வீடு தெரியவில்லை.
பின்னர் மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் காட்ட, தன் வீட்டை நோக்கிச் சென்றது கோழிக்குஞ்சு. கடைசியில் கோழிக்குஞ்சு தன் அம்மாவைக் கண்டுபிடித்ததா? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கி, குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.
வழவழப்புத் தாளில், பெரிய எழுத்துகளில், வண்ணப்படங்கள் நிறைந்து, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற புத்தகம். எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா, இந்நூலுக்கு அழகாகப் படங்கள் வரைந்திருக்கிறார்.
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 9444960935 |
விலை | ரூ 50/- |