சாகித்திய பாலபுரஸ்கார் விருது- 2023 உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்!

Aadhanin_pic

2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்!

வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்காக, இந்த விருது கிடைத்துள்ளது.

தூத்துக்குடி கோவில்பட்டியில் வசிக்கும் இவர் த.மு.எ.க சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.  மேலும் சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவர், இதுவரை 12 சிறுகதைத் தொகுப்புகள், 5 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் 60 க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். இதுவரை சிறார் நூல்கள் 100 க்கும் மேல், வெளியிட்டுள்ளார்.

தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது,  கலை இலக்கியப் பெருமன்றம் சிறுவர் இலக்கிய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது, தமிழ்ப்பேராயம் அழ.வள்ளியப்பா விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துச் சொல்வதில் மகிழ்கின்றோம்.

நன்றியுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: