ச.மாடசாமி

Madasamy_pic

பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தேசிய எழுத்தறிவு திட்டத்தின் தூதுவராக அறியப்பட்டவர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலத்துறை இயக்குநராகப் பணியாற்றிய போது, வகுப்பறைக்கு வெளியே புதிய மேடைகளை அமைத்து, மாணவர்களின் திறமைகள் மிளிரச் செய்தார். தம் அனுபவங்கள் வாயிலாக இவர் எழுதிய, ‘எனக்குரிய இடம் எங்கே?’ என்ற நூல், வகுப்பறைக்குள் தென்றல் வரத் திறந்து வைத்த சன்னல் எனலாம்.

‘அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல!’, ‘எனக்குரிய இடம் எங்கே?’, ‘என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா’, ‘குழந்தைகளின் நூறு மொழிகள்’, ‘தெரு விளக்கும் மரத்தடியும்’, ‘நிறத்தைத் தாண்டிய நேசம்’ போயிட்டு வாங்க சார்’, உட்பட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவர், கல்வி கலாச்சார ஆய்வாளர். சமச்சீர்க் கல்வி பாடநூல்களின் உருவாக்கத்திலும், மனித உரிமைக் கல்வியிலும், இவர் பங்கு முக்கியமானது,

Share this: