புதிய சிறார் நூல்கள்–நிவேதிதா பதிப்பகம்

இவை அனைத்தையும் சென்னை புத்தகத் திருவிழாவில், நிவேதிதா பதிப்பக அரங்கு எண் 613இல் வாங்கலாம்.

14 சிறார் கதைகள் கொண்ட இந்த நூலைக் ‘காட்டுக்குள்ளே இசைவிழா’ என்ற சிறுவர் கதைத் தொகுப்புக்காக, 2011ஆம் ஆண்டு ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ பெற்ற திரு கொ.மா.கோதண்டம் எழுதியுள்ளார். நீலன் என்ற பழங்குடியைச் சேர்ந்த சிறுவன், இவரது பிரபலமான கதாபாத்திரம். சிறுவர்கள் காட்டைப் பற்றியும், காட்டு விலங்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள, இக்கதைகள் உதவும். இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்க, உதவும் நூல். இந்நூலின் விலை ரூ80/-.

ஞா.கலையரசி எழுதியுள்ள இந்த நூலில், 10 சிறார் கதைகள் உள்ளன. இதிலுள்ள எல்லாக் கதைகளிலும் விலங்குகளும், பறவைகளுமே கதாபாத்திரங்கள். மொழி தான் நம் அடையாளம், பிறப்பில் உயர்வு, தாழ்வு சொல்லக் கூடாது போன்ற சில நீதிகளை, நேரடியாகக் கூறாமல், கதையின் போக்கில் வெளிப்படுத்தும் சில கதைகள் இதில் உள்ளன. காட்டுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகளும் இதிலுள்ளன. 6-9 வயதினர் வாசிக்கச் சுவாரசியமான கதைகள்! இதன் விலை ரூ80/-.

கலகல கரடியார்

என்பது போன்று, எளிய மொழியில் அமைந்து குழந்தைகள் ரசித்துப் பாடுவதற்கேற்ற 14 சிறுவர் கதைப்பாடல்கள், இதில் உள்ளன. குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம், திருத்தமான தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள முடியும். இதன் விலை ரூ50/-.

ஞா.கலையரசி எழுதிய இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் உள்ளன. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள், தமிழில் மிகக் குறைவு. உலகளவில் பிற மொழிகளில் வெளிவந்த சிறார் திரைப்படங்கள் குறித்து, இக்கட்டுரைகள் பேசுகின்றன. பெற்றோரும், ஆசிரியரும் தங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்க்கும் போட்டுக் காட்டச் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க, இது சிறந்த வழிகாட்டி நூல். இதன் விலை ரூ100/-.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மாலதி எழுதிய இச்சிறார் கதைத் தொகுப்பில் 10 கதைகள் உள்ளன. எல்லாக் கதைகளும் பள்ளி மாணவர்களை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, செல்போனிலிருந்து மீள்வதற்குப் புத்தகமே சிறந்த மாற்றுவழி, இயற்கையை நேசித்தல் போன்றவை, சில கதைகளின் கருக்களாக உள்ளன. இதன் விலை ரூ80/-.

நிவேதிதா அரங்கில் “அழ.வள்ளியப்பா நூற்றாண்டு நினைவு வெளியீடுகள்” என்ற தலைப்பில் வெளியான 30 நூல்களையும், தனியாகக் காட்சிப்படுத்தி அடுக்கியுள்ளார்கள். அவற்றிலிருந்து நீங்கள் உங்களுக்குத் தேவையான நூல்களை வாங்கலாம்.

Share this: