இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது.
குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைக்காட்சிகள் நிறைந்த பெரியவர்களுக்கான தமிழ்த் திரைப்படங்களையே, நம் குழந்தைகளும் பார்க்கிறார்கள். இம்மாதிரியான வன்முறைக்காட்சிகள் அவர்கள் மனதில் வன்மத்தையும், வெறுப்பையும் விதைக்கின்றன. எனவே சிறந்த சிறார் திரைப்படங்களைத் தேர்வு செய்து, குழந்தைகளுக்குக் காட்ட வேண்டியது நம் கடமை. உலகளவில் பிற மொழிகளில் வெளிவந்த சிறந்த சிறார் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல், சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க மிகவும் உதவும்.
“13 சிறார் திரைப்படங்கள் பற்றிய அளவான அறிமுகம். ஒரு நாவலைப் படிப்பதைப் போல இருந்தது, ஒவ்வொரு கட்டுரையும். ஏனெனில் பெரும்பாலான படங்கள், ஒரு சிறார் நாவலைத் தழுவியே எடுக்கப்பட்டிருக்கும். இதனை வாசிக்கும் சிறுவர்கள் முதலில் இந்தப் படங்களைத் தேடிப் பார்ப்பார்கள். கூடவே அந்த நாவல்களையும் தேடிப் படிப்பார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாசித்து விருப்பமான திரைப்படங்களைத் தங்கள் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்ட, இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது” என்று தம் முன்னுரையில் சிறார் எழுத்தாளர் விழியன் பாராட்டி எழுதியுள்ளார்.
வகை | சிறார் திரைப்படம் – கட்டுரைகள் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல்:- +91 89393 87295 |
விலை:- | ரூ100/- |