இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் ஆண்டாக அமையச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்!
டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அவசியம் குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள்! புத்தாண்டைப் புத்தகங்களுடன் கொண்டாடுங்கள்!
செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை அதிலிருந்து மீட்டு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைய வேண்டும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அரங்கு எண் 5இல் ஏற்பாடு செய்துள்ளார்கள். அங்கே பல்வேறு புத்தகங்கள் அடங்கிய குழந்தைகளுக்கான புத்தக பார்சல்கள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த பார்சல் வாங்கி வந்து, புத்தாண்டில் வீட்டில் ஒரு நூலகம் அமைக்க வாழ்த்துகள்!
தமிழ்நாடு பாடநூல் கழகமும் வழ வழ தாளில் வண்ண வண்ணப் புத்தகங்களைச் சிறுவர்க்காக வெளியிட்டுள்ளது. அவர்களது அரங்கு எண் F54. வீட்டில் சிறார் நூல்கள் வாங்கி வந்து, சிறுநூலகம் அமைப்பதே, குழந்தைகளுக்கு வாசிப்பில் நாட்டம் ஏற்படுத்துவதற்கான முதல் வழி! பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே குழந்தைகளின் படைப்புத் திறமையை வெளிக்கொணர்ந்து, எதிர்காலத்தில் சிறந்த ஆளுமையாக அவர்கள் திகழ உதவி செய்யும்.
வாசிப்பைச் சுவாசிப்போம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.