மருத்துவத் துறையில் பணியாற்றும் ‘பூகா’ என்ற புனைபெயர் கொண்ட பூர்ணிமா கார்த்திக், சென்னையில் வசிக்கிறார். இவர் இது வரை முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களும், நாற்பது சிறுகதைகளும், சில சிறார் கதைகளும் எழுதியுள்ளார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னிதழில் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது, ‘செந்தழலே செம்முளரி’ என்ற வரலாற்றுப் புதினம், சென்னை வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள சிறார் வாசிப்பு நூல் வரிசையில், இவரது ‘சிவி கேட்ட வரம்’ என்ற நூல் வெளியாகியுள்ளது.