கரூரில் வசிக்கும் ஜெயா சிங்காரவேலு பெற்ற பட்டங்கள் M.sc.,M.phil; B.Edஇல் சிறப்புக் கல்வி. ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது இரண்டு நாவல்கள் அச்சில் வெளியாகியுள்ளன. ‘கோடனின் கொடை’ என்ற இவரது வரலாற்றுப் புதினம், சென்னை வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டிருக்கும் சிறார் வாசிப்பு நூல் வரிசையில், இவரது ‘உதவி’ என்ற நூல் வெளியாகியுள்ளது.