பூனைக்கு மணி கட்டியது யார்?

Poonaikku_Mani

கிட்டான் என்றொரு பூனைக்குட்டி.  ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர்.  கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன. 

ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு, இக்கதையில் எலிகள் சாமர்த்தியமாகத் தீர்வு காண்கின்றன. 

கிட்டானுக்கு மணியைக் கட்டுவதற்கு, எலிகள் என்ன தந்திரம் செய்தன? என்று தெரிந்து கொள்ளக் கதையைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

வழவழப்பான தாளில், வண்ணப்படங்கள் நிறைந்த கதைப் புத்தகம்.  குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, எளிமையான மொழிப் பாடலின் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.

பூனைக்கு மணி கட்டியது யார்?மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
மூலம்
தமிழாக்கம்
லியூ பெங்
சு.வீராச்சாமி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை +91 8778073949
விலை₹ 40/-
Share this: